Breaking News

சேமிப்புத்திட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை  விவேகானந்த  வித்தியாலயத்தில், வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் சிந்தனையிலும், வழிகாட்டலிலும், மேற்பார்வையிலும் மாணவர்களுக்கான சேமிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றது.

2023ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் இருந்து  ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் அதிபரின் தொடர்ச்சியான வழிகாட்டலில் இடம்பெற்றுவருகின்றது. 

பாடசாலையில் இணைந்து கொள்ளும் மாணவர்கள் உயர்தரத்தினைக்கற்று உயர்கல்வியை தொடர்வதற்கு தமது சேமிப்பினை பயன்படுத்தும் நோக்கில், உண்டியல் வழங்கப்பட்டு அவ்வுண்டியல்கள் நிரம்பியதும் அதனைப்பெற்று   மாணவர்களுக்கான சேமிப்பு கணக்கு திறக்கப்பட்டு பணம் வைப்பில் இட்டு வழங்குகின்ற செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

இச்செயற்பாடு முன்னுதாரணமான செயற்பாடாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments