History
மீன்பாடும் தேனாடம் மட்டுமா நகரின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுட்குட்பட்ட குளுவுனமடு கிராம சேவகர் பிரிவிலே வயலும் வயல் சார்ந்த மருத நிலமான கொல்லநுலைக் கிராமத்திலே கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயமானது அமைந்துள்ளது.
இதனை நீறுபோட்டசேனை பள்ளிக்கூடம் என மூதாதையோர் அழைப்பர். தமிழுக்கும் சைவத்திற்க்கும் அரும் பணியாற்றிய சமயத்துறவி சுவாமி விவேகானந்தரின் திருநாமத்தினையே சூட்டவேண்டுமென பொதுமக்களும்,ஸ்தாபகர்களும் உளம் கொண்டதால் அந் நாமமே திருநாமமாக சூட்டப்பட்டது.