சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள பெற்றோர், மாணவர்களுடனான சந்திப்பு
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு மே மாதம் தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடனான சந்திப்பு 08.04.2024ஆம் திகதி இன்று இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள் முதலாம் தவணையில் பெற்றுக்கொண்ட அடைவுமட்டம் தற்போது இறுதியாக நடாத்தப்பட்ட போட்டியில் பெற்றுக்கொண்ட புள்ளிகள், இறுதிப்பரீட்சையில் பெற்றுக்கொள்ளக்கூடிய பெறுபேறு தொடர்பில் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் விளக்கமளித்தார்.
இருக்கின்ற குறுகிய காலத்தில் நடாத்தப்படவிருக்கின்ற செயற்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெளிவுபடுத்தியதுடன், மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் அறிவுரை வழங்கினார்.
No comments