மாணவர் தலைவர்களுக்கு சின்னம் அணிவிப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று(22.03.2023) புதன்கிழமை இடம்பெற்றது.
ஒழுக்கக்குழுவின் ஏற்பாட்டில், பாடசாலையின் அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மாணவர் தலைவர்களின் கடமைகள், பண்புகள், மாணவர் தலைவரின் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
மேலும், மாணவர் தலைவர்கள் அனைவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அதிபர், ஆசிரியர்களினால் மாணவர்களுக்கு சின்னமும் அணிவிக்கப்பட்டது.
குறித்த சின்னங்களை வைத்தியர் தி.தவநேசன் அச்சிட்டு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments