Breaking News

பாடசாலை அபிவிருத்தி தொடர்பிலான சமூக அமைப்புக்களுடனான ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய அபிவிருத்தி தொடர்பிலான சமூகமட்ட அமைப்புக்களுடனான ஒன்றுகூடல் இன்று(23) இடம்பெற்றது. 

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களைக் கொண்ட கிராம அமைப்புக்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன் போது, பாடசாலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும், மாணவர்களின் கல்வி அபிவிருத்தி, இணைப்பாட விதான விருத்தி தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.






No comments