தை மாதத்தில் பிறந்த மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களில் தை மாதம் பிறந்த மாணவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று(22) இடம்பெற்றது.
காலைக்கூட்டத்தில் குறித்த மாதத்தில் பிறந்த மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி பாடல் பாடப்பட்டு கேக் வெட்டப்பட்டது.
வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments