Breaking News

கொல்லநுலை விவேகானந்தாவில் பட்டிப்பொங்கல் விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(16) புதன்கிழமை பட்டிப்பொங்கல் விழா நடைபெற்றது.
இதன்போது, கோமாதா பூசையும் நடைபெற்றதுடன், பட்டிக்காரர்கள் தமது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டதுடன், தைப்பொங்கல், பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் சிவஸ்ரீ ப.மானாகப்போடி குருக்கள், சிவஸ்ரீ.வ.ஹரிகரசர்மா குருக்கள் ஆகியோரினால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வில், விவசாய நாட்டார் பாடல் பாடப்பட்டதுடன், பட்டிக்கு நன்றி செலுத்தும் பாடல்களும் மாணவர்களினாலும், ஆசிரியர்களினாலும் பாடப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் பாரம்பரிய பண்பாடுகளை எடுத்துச்செல்லும் வகையிலும், பண்டிகைகள் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அனுபவக்கற்றலினை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதனை நோக்காக கொண்டு இவ்விழா பாடசாலையில் கொண்டாட்டப்பட்டதாக வித்தியாலயத்தின் அதிபர் குறிப்பிட்டார்.