விளையாட்டு மைதானத்தில் சிரமதானப்பணி

கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இன்று(10.01.2019) சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் சா.விக்னேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், கிராமசேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் ஒழுங்கமைப்பிலும், பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடனும் இச்சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.