Breaking News

கொல்லநுலையில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(31) வியாழக்கிழமை இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம்,  மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒலிம்பிக்தீபம் ஏற்றல் நிகழ்வுடன் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுப்போட்டியில், அஞ்சல் ஓட்டம், குறுந்தூர ஓட்டம், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி போன்றனவும் நடைபெற்றன.

குறித்த விளையாட்டுப்போட்டியில், வள்ளுவர் இல்லம் முதலிடத்தினைப் பெற்றமையுடன், கம்பர் இல்லம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்;டது.
இதன்போது, போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.