எழுத்தறிவு தினம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(10) செவ்வாய்க்கிழமை எழுத்தறிவு தினத்தினை சிறப்பித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், எழுத்தறிவு தின தொடர்பில் விழிப்புணர்வு நாடமொன்று ஆசிரியர்களினால் நிகழ்த்தப்பட்டமையுடன் பாடலொன்றும் பாடப்பட்டது.
இந்நிகழ்வில் வலய ஆசிரிய ஆலோசகர் ம.லச்சுதன் கலந்து கொண்டமையுடன், மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலமொன்றும் நிகழ்த்தப்பட்டது.
No comments