Breaking News

ஆசிரியர்களுக்கு கியூ.ஆர் கோட்

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(15) வெள்ளிக்கிழமை ஆசிரியர்களுக்கு கியூ.ஆர் கோட் வழங்கி வைக்கப்பட்டது.

ஆசிரியர்களின் சுயவிபரங்கள் உள்ளடக்கிய கியூ.ஆர் கோட்டை பாடசாலையின் அதிபர் வ.துசாந்தன் வழங்கி வைத்;தார்.

தற்கால நவீன யுகத்திற்கு ஏற்ற வகையிலும், இலகுவான முறையில் தரவுகளை இற்றைப்படுத்தி பேணக்கூடியதும், செலவுகளை குறைக்கும் வகையிலும் வித்தியாலய அதிபரின் முழுமையான செயற்பாட்டினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையில் பணியாற்றுகின்ற கல்விசார், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இக்கியூ.ஆர் கோட் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















No comments