இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் விழா இன்று(04) சனிக்கிழமை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, குறுந்தூர ஓட்டம், அஞ்சல், செயற்பட்டு மகிழ்வோம் போன்ற போட்டிகளும், மைதான பவனி, அணிநடை மரியாதை, கராத்தே போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கம்பர், வள்ளுவர் இல்லங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற குறித்த போட்டியில் வள்ளுவர் இல்லம் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டமையுடன், இல்லச்சோடனை, அணிநடை மரியாதை போன்றவற்றில் கம்பர் இல்லம் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இதன் போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் மாகாணக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந.குகதாசன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


No comments