கொல்லநுலையில் ஆசிரியர் வாண்மை விருத்தி செயலமர்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆசிரியர் வாண்மை விருத்தி செயலமர்வு இன்று(08) நடைபெற்றது.
21ம் நூற்றாண்டுக்கான கல்வியை வழங்கக்கூடிய ஆசிரியர்கள் தம்மை எவ்வகையில் தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். தற்கால சவால்களை முகம்கொடுக்க ஆசிரியர்களின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலான வாண்மை விருத்தி செயலமர்வே இடம்பெற்றது.
வளவாளராக மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளர் இ.வேல்சிவம் கலந்துகொண்டார். மேலும் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் க.பரமானந்தம் ஆசிரியர் ஆலோசகரும் கலந்து கொண்டிருந்தார்.
No comments