Breaking News

போதைத்தடுப்பு பாடசாலை வாரம் - விழிப்புணர்வு ஊர்வலம்

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் போதைத்தடுப்பு பாடசாலை வாரத்தின் முன்னிட்டு போதையை தடுப்போம் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று(28) கொல்லநுலை பாடசாலையின் மாணவர்களால் நடாத்தப்பட்டது.

இதன்போது, மாணவர்கள், போதையால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்தும், இவற்றினை இல்லாமல் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலமானது, வித்தியாலயத்திலிருந்து, பாடசாலையை சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்றது.
ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.