Breaking News

கொல்லநுலை மாணவன் தேசிய சாதனை.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவன் பு.ரிசாந்தன் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் 3ம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளான்.

தரம் – 7 வகுப்பு பிரிவில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகஸ்ட பாடசாலையான இப்பாடசாலையிலிருந்து கடந்த காலங்களிலும் சமூகவிஞ்ஞானப்போட்டியில் கலந்து கொண்ட மாணவரொருவர் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றிருந்தமை எடுத்துக்காட்டத்தக்கது.
பிரத்தியேக வகுப்புக்கள் இல்லாத சந்தர்ப்பத்திலும் பாடசாலை கற்றலை மாத்திரம் முழுமையாக பயன்படுத்தி இச்சாதனையை புரிந்துள்ளனர்.
மாணவனின் சாதனைக்கு, வழிகாட்டியாக நின்று கற்பித்த த.தேவநாதன், க.ரவிசங்கர் ஆசிரியர்களுக்கும், சா.விக்னேஸ்வரன் அதிபருக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றியைத் தெரிவித்ததுடன், மாணவர்களுக்கு பாராட்டினையும் வாழ்த்தினையும் தெரிவித்தனர்.

thanks
supeedsam