Breaking News

கரம் (Carrom) போன்ற உள்ளக விளையாட்டு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள், பாடசாலை நேர அட்டவணை நிறைவுற்றதும் உள்ளக விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் முடிந்ததும், மாணவர்கள் தங்களது ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்கும் வகையில் கரம் (Carrom) போன்ற உள்ளக விளையாட்டுகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து மன ஒருமைப்பாட்டை வளர்க்கவும் இத்தகைய நடவடிக்கைகள் பெரிதும் உதவுவதாகப் பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். 





 

No comments