Breaking News

ஆரம்பப்பிரிவு பெற்றோருடனான தரவட்டக் கூட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு பெற்றோருடனான தரவட்டக் கூட்டம் இன்று (03.07.2026) பாடசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு. வ. துசந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கல்வி வளர்ச்சி, ஆளுமை அபிவிருத்தி மற்றும் கற்றல் திறன்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பான முக்கிய விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மாணவர்களின் ஆரம்பக்கல்வியை வலுப்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல்கள் குறித்து ஆராயப்பட்ட இக்கலந்துரையாடலில்,  பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொண்டனர்.



No comments