Breaking News

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் சாரண மாணவர்கள்

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் பாதுகாப்பு மற்றும் சேவைப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் பாடசாலை சாரண மாணவர்கள் தொண்டர்களாக இணைந்து உதவி புரிந்தனர்.

மாணவர்களிடையே சமூக சேவை மனப்பான்மையையும், பொறுப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.






No comments