மாணவர்களுக்கான விசேட தொழில் வழிகாட்டல் செயலமர்வு!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், மாணவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் திட்டமிடலை மேம்படுத்தும் நோக்கில் தொழில் வழிகாட்டல் (Career Guidance) செயலமர்வு அண்மையில் பாடசாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.
எதிர்காலத்தில் சந்தை வாய்ப்புள்ள தொழில் துறைகள் எவை, அத்தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்குப் பொருத்தமான கற்கை நெறிகளை (Study Streams) எவ்வாறு சரியாகத் தெரிவு செய்வது என்பது குறித்தும் இதன்போது மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அத்துடன் மாணவர்களின் திறமைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உயர்கல்வியைத் தொடர்வது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைப் பாதையைத் தெளிவாகத் திட்டமிட உதவும் வகையில் பிரதேச செயலக மனிதவள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இப் பயனுள்ள செயலமர்வுக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.






No comments