Breaking News

சிரமதானப் பணி

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், பாடசாலை அதிபர் மற்றும் கிராம மக்களின் கூட்டுப் பங்களிப்புடன் விசேட சிரமதானப் பணி ஒன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. (08.08.2026)

பாடசாலை வளாகத்தைச் சுத்தப்படுத்தி, மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தூய்மையான கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில் இச்சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாடசாலை அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதி கிராம மக்கள் கலந்துகொண்டு பாடசாலைச் சூழலைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். 







No comments