ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பயிற்சி முகாம்!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களுக்காக, மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் (Institute of Human Resource Development) அனுசரணையில் இரு நாட்கள் விசேட தலைமைத்துவப் பயிற்சி முகாம் (14.08.2026 மற்றும் 15.08.2026) பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களிடையே நேர்மறைச் சிந்தனைகளை வளர்ப்பதுடன், அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஆளுமை விருத்தியை (Leadership & Personality Development) மேம்படுத்தும் முதன்மை நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இப் பயிற்சிப் பட்டறையில், மாணவர்களின் குழுச் செயற்பாடுகள், தகவல் தொடர்புத் திறன், முடிவெடுக்கும் ஆற்றல் மற்றும் சுய நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலான பல்வேறு செய்முறைப் பயிற்சிகளும் விழிப்புணர்வு வகுப்புகளும் பயிற்றுநர்களால் வழங்கப்பட்டன.
மாணவர்களின் எதிர்கால ஆளுமை உருவாக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்த இப் பயிற்சி முகாமினை ஏற்பாடு செய்து அனுசரணை வழங்கிய மனித வள அபிவிருத்தி நிறுவனத்திற்கு பாடசாலை நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.












No comments