மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று கற்றல் சூழலை பார்வையிட்ட ஆசிரியர்கள்!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் கற்றல் சூழலை அவதானிக்கும் விசேட செயற்றிட்டம் ஒன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் அவர்களின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் அமைவாக ஆசிரியர்கள் இச் செயற்றிட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன்போது மாணவர்களின் வீடுகளுக்குச் சென்ற ஆசிரியர்கள், அவர்களின் வீட்டு கற்றல் சூழல், படிக்கும் முறைமைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டதுடன், பெற்றோர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வியை மேலும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் முன்வைத்தனர்.
பாடசாலை நேரத்தைத் தாண்டியும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவர்களின் இல்லங்களுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.






No comments