கிராமங்கள் தோறும் விசேட கலந்துரையாடல்கள்!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தையும், அவர்களின் தினசரி பாடசாலை வருகையையும் அதிகரிக்கும் நோக்கில் கிராமங்கள் தோறும் விசேட கலந்துரையாடல் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலை அதிபரின் சிறப்பான சிந்தனை மற்றும் வழிகாட்டலில் இப் புதிய செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுத் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாணவர்கள் வழக்கமாகப் பாடசாலைக்கு வருகை தருவதை உறுதி செய்யவும், அவர்களின் கற்றல் தரத்தை வீடுகளிலிருந்தும் உயர்த்துவதற்கும் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கென அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாகக் கிராமப் பகுதிகளுக்குச் சென்று பெற்றோர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.





No comments