Breaking News

'போதையற்ற கிராமம்' விழிப்புணர்வுச் செயற்றிட்டம்!

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் 'போதையற்ற கிராமம்' என்னும் தலைப்பிலான விசேட விழிப்புணர்வுச் செயற்பாடு அண்மையில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

போதைப்பொருள் பயன்பாடற்ற ஆரோக்கியமான கிராம உருவாக்கத்தின் மூலமே நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதி செய்ய முடியும் என்ற நோக்கில் இச்செயற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சுகாதாரப் பரிசோதகர் வளவாளராகக் கலந்துகொண்டு, போதைப்பொருட்களால் ஏற்படும் தனிநபர் மற்றும் சமூகப் பாதிப்புகள் குறித்தும், போதையற்ற சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் மாணவர்களின் பங்கு பற்றியும் விரிவான விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்.

மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதையற்ற சமூகத்தை உருவாக்கி நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பாடசாலையால் முன்னெடுக்கப்பட்டது.





No comments