Breaking News

நிகழ்நிலையில் (Online) பரீட்சை

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், பாடசாலை வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவர்கள் நிகழ்நிலையில் (Online) பரீட்சைக்குத் தோற்றிய புதிய வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இப்பாடசாலையின் தரம் 9 மாணவர்கள் தமது இரண்டாம் தவணைப்பரீட்சைக்கு இம்முறை கணினி மற்றும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி நிகழ்நிலையில் தோற்றினர். கிராமப்புறப் பாடசாலை ஒன்றில் இவ்வாறான நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான பரீட்சை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், நவீன கற்றல் சூழலுக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னோடி முயற்சியாகும்.



No comments