Breaking News

சுகாதார வினா விடை போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் சுகாதாரம் தொடர்பான பொது அறிவு வினாவிடை போட்டி இன்று(14) செவ்வாய்க்கிழமை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையில் தரம் 6 – 11 வரையான வகுப்புக்களை கொண்ட ஒவ்வொரு தரங்களும் ஒவ்வொரு குழுக்களாக இணைந்து இப்போட்டியில் கலந்துகொண்டனர். 

இதில் தரம் 10 மாணவர் குழு முதலாம் இடத்தினையும் தரம் 7மாணவர் குழு இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதனை வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் பு.தயாரூபன் ஒழுங்குபடுத்தி நடத்தினார்.

சுகாதார அறிவையும், சுகாதார தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பொருட்டு இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.




No comments