Breaking News

உடைந்த 50 கதிரைகள் வெற்றிகரமாகத் திருத்தியமைப்பு!

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் உடைந்த நிலையில் காணப்பட்ட 50 கதிரைகள் முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

மாணவர்களின் கற்றல் உபகரணப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், பாடசாலை அதிபரின் சிறப்பான வழிகாட்டல் மற்றும் தலைமையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிபரின் ஒருங்கிணைப்பில் பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்து, தங்களின் கூட்டு முயற்சியால் உடைந்த கதிரைகளைச் சீரமைக்கும் பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தனர்.

 





No comments