Breaking News

பெற்றோர்களின் பங்களிப்புடன் சிரமதானப் பணி!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், பெற்றோர் அனைவரையும் உள்ளடக்கிய விசேட சிரமதானப் பணி ஒன்று அண்மையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினை ஏற்று, மாணவர்களின் நலன் மற்றும் பாடசாலையின் தூய்மையைக் கருத்திற்கொண்டு பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இச்சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

பாடசாலை வளாகத்தைச் சுத்தப்படுத்துதல், புதர்களை அகற்றி மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் மற்றும் வகுப்பறைப் பகுதிகளைச் சீரமைத்தல் போன்ற பணிகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன. 





 

No comments