தேசிய உற்பத்தித்திறன் மதிப்பீடு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகளினால் விசேட கள மதிப்பீட்டுச் செயற்பாடுகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ், பாடசாலையின் நிர்வாகச் செயற்பாடுகள், கற்றல்-கற்பித்தல் சூழல், வளங்களின் மேலாண்மை மற்றும் 5S கோட்பாடுகளின் பயன்பாடு குறித்து ஆராயும் நோக்கில் இம்மாணவ மைய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலைக்கு வருகை தந்த தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் மதிப்பீட்டுக் குழுவினர், பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள், கோப்புகள் பராமரிப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்தனர்.
கிராமப்புறப் பாடசாலையான கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் உற்பத்தித்திறனை உயர்த்தி, அதனை ஒரு முன்மாதிரிப் பாடசாலையாக மாற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாட்டைப் பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.




No comments