Breaking News

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல்: விசேட பெற்றோர் கூட்டம்!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் பெற்றோருடனான விசேட கலந்தாலோசனைக் கூட்டம் (28.07.2026) அன்று பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு. வ. துசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பரீட்சை நெருங்கிவரும் இக்காலப்பகுதியில் மாணவர்களை மனரீதியாகவும் கல்வி ரீதியாகவும் எவ்வாறு தயார்படுத்துவது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் அதிபரால் முன்வைக்கப்பட்ட முக்கிய வழிகாட்டல்கள்:

  • உள ஆற்றுப்படுத்தல்: பரீட்சை அச்சமின்றி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பரீட்சையை எதிர்கொள்ள வீடுகளில் பெற்றோர் வழங்க வேண்டிய உளவியல் ரீதியான ஆதரவு மற்றும் வழிகாட்டல்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

  • பரீட்சை எதிர்கொள்ளல்: இறுதிக்கட்ட காலப்பகுதியில் மாணவர்களின் சுகாதார நிலை, உணவுப் பழக்கம் மற்றும் நேர நிர்வாகத்தைப் பேணி பரீட்சைக்கு அவர்களை எவ்வாறு முழுமையாகத் தயார்படுத்துவது என்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு அதிபரால் முன்னெடுக்கப்பட்ட இக்கலந்தாலோசனை பெற்றோர் மத்தியில் தெளிவை அளித்துள்ளது.






No comments