Breaking News

டில்மா நிறுவனத்தால் சமையல் பாத்திரங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களின் மதிய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 'டில்மா' (Dilmah) நிறுவனத்தினால் சமையல் பாத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவையான மதிய உணவை ஆரோக்கியமான முறையில் சமைத்து வழங்குவதற்கு ஏற்ற வகையிலான தரமான சமையல் உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களே இவ்வாறு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

மாணவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்தவும், தடையற்ற கற்றல் சூழலை உறுதி செய்யவும் டில்மா நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்த சமூக நலன்புரிச் சேவைக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.






 

No comments