Breaking News

களத்திலே கற்றல்: அரச நிறுவனங்களை நேரில் பார்வையிட்ட மாணவர்கள்!

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் இன்று (10.07.2026) கல்விச் சார்ந்த கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

மாணவர்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பல்வேறு அரசு நிறுவனங்களுக்கும் நேரில் சென்று, அவற்றின் தொழிற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து விரிவாக அறிந்து கொண்டனர்.

பாடசாலைக் கலைத்திட்டக் கற்றல் அனுபவங்களை நடைமுறை ரீதியாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கள விஜயத்தில், அரச அதிகாரிகளால் மாணவர்களுக்குச் சேவைகள் தொடர்பான விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சமூக அறிவையும் அனுபவப் பகிர்வையும் மேம்படுத்த அமைந்த இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்தனர்.












No comments