யோகாசன பயிற்சி ஆரம்பம்!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான விசேட யோகாசன பயிற்சி 16.06.2026 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாணவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உன்னத நோக்கோடு இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. வலய ஆசிரிய ஆலோசகர் த.ஜெயகரன் அவர்களின் தலைமையிலான அனுபவம் வாய்ந்த யோகா பயிற்சி குழுவினரால் மாணவர்களுக்கான இப்பயிற்சிகள் மிகவும் நேர்த்தியான முறையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments