Breaking News

மாணவர்களை நேரில் பாராட்டிய பிரதிக்கல்விப் பணிப்பாளர்!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை இன்று(16.06.2026)வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி தே.உதயகரன் அவர்கள் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

2026ஆம் ஆண்டு நடைபெற்ற இணைப்பாடவிதான செயற்பாடுகளில் (போட்டிகளில்) கலந்துகொண்டு, மாகாணமட்டத்தில் வெற்றிகளை ஈட்டி பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர் பாடசாலைக்குச் சமூகம் கொடுத்து இந்நேரடிப் பாராட்டினைத் தெரிவித்தார். பிரதிக்கல்விப் பணிப்பாளரின் இந்த வருகையும் பாராட்டும் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெரும் ஊக்கத்தை அளிப்பதாக அமைந்திருந்தது. 







No comments