Breaking News

மாணவர் பாராளுமன்ற தேர்தல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், மாணவர் பாராளுமன்ற தேர்தலும் அதற்கான வாக்கெண்ணும் செயற்பாடுகளும் இன்று(12.06.2026) மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டன.

பாடசாலையின் புதிய மாணவர் பாராளுமன்ற சபையை முறைப்படி அமைக்கும் நோக்கில் இச்செயற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனநாயக பண்புகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இத்தேர்தலில், மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்துகொண்டு தமது வாக்குகளைப் பதிவு செய்வதைக் காணக்கூடியதாக இருந்தது.

தேர்தல் மற்றும் வாக்கெண்ணும் பணிகள் அனைத்தும் மிகச் சரியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, பாடசாலை ஆசிரியர்கள் தேர்தல் கடமைகளில் முழுமையாக ஈடுபட்டு வழிகாட்டல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.














No comments