Breaking News

தரம் 11 மாணவர்களின் பெற்றோருக்கான விசேட கலந்துரையாடல் கூட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 11 மாணவர்களின் கல்வி அடைவினை அபிவிருத்தி செய்யும் வகையிலான விசேட பெற்றோருக்கான கலந்துரையாடல் கூட்டம் 11.06.2026ஆம் திகதி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் அவர்கள்  கலந்துகொண்டார்.

இதன்போது மாணவர்களின் தற்போதைய கல்வி அடைவு மட்டங்கள் மற்றும் அவர்களின் நாளாந்த பாடசாலை வரவின் முக்கியத்துவம் குறித்து பெற்றோருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், மாணவர்களின் வீட்டு சுயகற்றல் முறைகள் மற்றும் மாணவர் ஒழுக்க விழுமியங்களை பேணுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments