Breaking News

பாராளுமன்ற அமர்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு 18.06.2026ஆம் திகதி வியாழக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

வித்தியாலய வரலாறு பாட ஆசிரியர் திருமதி துலஸ் ரவிகரன் ஒழுங்குபடுத்தலில் இவ் அமர்வு ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. 

இவ்வமர்வுக்கு பாடசாலை பாராளுமன்ற சபாநாயகர் சி.நிதர்சனா தலைமை தாங்கினார். 

இதன்போது, அனைத்து உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமையுடன், அமைச்சர்கள் அனைவரும் தாங்கள் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் முன்வைப்பு செய்தனர்.

இவ்வமர்வின் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன், ஆசிரியர்களான சா. தட்சணாமூர்த்தி, துலஸ் ரவிகரன் ஆகியோர் கருத்துக்களையும் முன் வைத்தனர்.






 









No comments