திருஞானசம்பந்தர் குருபூசை
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் திருஞானசம்பந்தர் குருபூசை தின நிகழ்வு இன்று பேச்சியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது, திருஞானசம்பந்தர் செய்த சமயப்பணி தொடர்பில் மாணவர்கள், ஆசிரியரினால் கருத்துரைகள் வழங்கப்பட்டன. மேலும் அவரால் பாடியருளப்பட்ட தேவாரங்களும் இதன்போது பாடப்பட்டன.
மாணவர்கள், ஆசிரியர்கள் வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.


No comments