சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலயத்தின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலை வளாகத்தில் 23.04.2026ஆம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றன. வித்தியாலய அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்களின் கலாசார உணர்வுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் பாடசாலை மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விளையாட்டுப் போட்டிகளுடன் மாத்திரமன்றி, மங்கலமான முறையில் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றதோடு, பாரம்பரிய சிற்றுண்டி வகைகளும் பரிமாறப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வானது மாணவர்களிடையே பாரம்பரிய விழுமியங்களைக் கொண்டு சேர்ப்பதோடு, அவர்களின் ஒற்றுமையையும் பலப்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.














No comments