திறன் பலகை பயன்பாடு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களுக்கான திறன் பலகை (Smart Board) பயன்படுத்துதல் தொடர்பான வாண்மை விருத்திச் செயற்பாடு 22.04.2026 ஆம் திகதி நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இச்செயற்பாட்டில், நவீன கற்பித்தல் உபகரணப் பயன்பாட்டை சகல ஆசிரியர்களும் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன் போது, வித்தியாலய ஆசிரியர் கோ.சதுசன் அவர்களால் திறன் பலகை பயன்பாடு மற்றும் அதன் நுட்பங்கள் தொடர்பிலான விரிவான விளக்கமளிப்புகளும் செயல்முறைப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments