மாணவர் மன்ற நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், மாணவர்களின் கலை மற்றும் ஆளுமைத் திறன்களை வெளிப்படுத்தும் மாணவர் மன்ற நிகழ்வு இன்று (18.06.2026) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாணவர் மன்றப் பொறுப்பாசிரியர் திருமதி சி.ஜெயகௌரி அவர்களின் வழிகாட்டலிலும், வித்தியாலய மாணவர் மன்ற நிர்வாகத்தின் நேர்த்தியான ஒழுங்குபடுத்தலிலும் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது மாணவர்களின் ஆக்கத்திறன், பேச்சாற்றல் மற்றும் கலைத் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலான பல்வேறான கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டு, சக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பாராட்டுக்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.





No comments