செயற்கை நுண்ணறிவு கற்பித்தலுக்கு பயன்படுத்தல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், இடைநிலை பிரிவு ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி நெறியொன்று அண்மையில் நடாத்தப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை கற்பித்தல் செயற்பாடுகளில் எவ்வாறு வினைத்திறனாகப் பயன்படுத்துவது என்பது தொடர்பாகவே இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் வ.துசாந்தன் அவர்களின் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடைபெற்ற இப்பயிற்சி நெறியானது, ஆசிரியர்களின் வாண்மைத்துவத்தை (Professionalism) அபிவிருத்தி செய்வதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப மாணவர்களின் கற்றல் முறைகளை மேம்படுத்தவும், வகுப்பறை கற்பித்தலை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றவும் இத்தகைய பயிற்சிகள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



No comments