Breaking News

தரம் 11 மாணவர்களின் பெற்றோருக்கான விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 11 மாணவர்களின் பெற்றோருக்கான விசேட கலந்துரையாடல் கூட்டம்  09.04.2026ஆம் திகதி  நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் ஒழுக்கம் சார்ந்த பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக, மாணவர்களின் தற்போதைய கல்வி அடைவு மட்டங்கள் மற்றும் அவர்களின் நாளாந்த பாடசாலை வரவின் முக்கியத்துவம் குறித்து பெற்றோருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், மாணவர்களின் பரீட்சை வெற்றிக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், மாணவர்களின் வீட்டு சுயகற்றல் முறைகள் மற்றும் மாணவர் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



 

No comments