சதுரங்கப் போட்டியில் மாகாண மட்ட சாதனை:
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவி ஒருவர், மாகாண மட்ட ஒற்றையர் சதுரங்கப் போட்டியில் மெரிட் (Merit) சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதுடன், தேசிய மட்டப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
அம்பாறை தெகியத்தக்கண்டி தேசிய பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற இம்மாகாண மட்ட சதுரங்கப் போட்டியிலேயே இம்மாணவி இத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போட்டியின் மிகச்சிறந்த முடிவுகளின் அடிப்படையில், குறித்த மாணவி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.



No comments