சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவாகி மாணவர்கள் சாதனை!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் சமூக விஞ்ஞானப் போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி, மாகாண மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வலய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில், இப்பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்கும் சூ.திவா என்ற மாணவன் மூன்றாம் இடத்தினையும், தரம் 8 இல் கல்வி கற்கும் வ.தர்சா என்ற மாணவி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டு மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.




No comments