மாகாணமட்ட தமிழ்மொழித்தினப் போட்டியில் சாதனை!
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் விசேட கூத்துப் போட்டியில் கலந்துகொண்டு மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியில் இந்த மாகாணமட்டப் போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டிக்காக மாணவர்களை பாடசாலை ஆசிரியர்களான இ.குகநாதன் மற்றும் ம.கேதீஸ்வரன் ஆகியோர் திறம்பட பயிற்றுவித்து வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments