Breaking News

தரம் 1 மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், தரம் 1 மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்ட கலந்துரையாடல் இன்று(30.06.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


பாடசாலை அதிபரின் வழிகாட்டலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, மாணவர்களின் கல்வி அடைவு மட்டங்களை உயர்த்துதல், பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியில் பெற்றோர்கள் வழங்க வேண்டிய பங்களிப்புகள் மற்றும் வீட்ட சூழலில் மாணவர்களை சுய கற்றல் செயற்பாடுகளில் எவ்வாறு முறையாக ஈடுபடுத்துவது போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் தரம் 1 வகுப்பாசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






No comments