டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்று(26.06.2026) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாட்டின் போது, சுகாதார பரிசோதகர் கருணாநந்தா இதில் கலந்து கொண்டு டெங்கு நுளம்பின் உருவாக்கம், டெங்கு நோய் ஏற்படக்காரணம், டெங்கு நுளம்புகள் பரவலை தடுக்கும் வழிகள் குறித்து பல்வேறான விளக்கங்களை வழங்கினார்.
இதன்போது, கிராமசேவை உத்தியோகத்தர், கிராம நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.




No comments