ஆரம்ப பிரிவு பெற்றோருக்கான தரவட்ட கூட்டம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்ட கூட்டம் இன்று(26) வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மாணவர்களின் வரவு, பிந்திய வருகை, மாணவர்களின் அடைவு, வீட்டு கற்றல், கல்வியின் முக்கியத்துவம், உற்பத்தி திறன், மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், எதிர்கால செயற்பாடுகள், பெற்றோரின் ஒத்துழைப்பு தொடர்பிலும் குறிப்பிடப்பட்டது.
இதன் போது, ஆரம்ப பிரிவு ஆசிரியர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.










No comments