Breaking News

கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் சாதனை!


மட்டக்களப்பு மேற்கு வலயக் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வான அணிநடை மரியாதைப் போட்டியில், வகை 2 பாடசாலைகளுக்கு இடையிலான தரப்படுத்தலில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மொத்தம் ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த ஆறு அணிகள் பங்குபற்றிய இக்கடுமையான போட்டியில் இத்திறமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வருடத்திற்கான தனிநபர் விளையாட்டுப் போட்டிகளிலும் இப்பாடசாலை மாணவர்கள் பல முதலிடங்களை வாரிக்குவித்துள்ளனர். கதிஸ்காந்த் உயரம் பாய்தலிலும், மோகன்தாஸ் முப்பாய்ச்சல் மற்றும் உயரம் பாய்தல் ஆகிய இரு போட்டிகளிலும் முதலிடங்களைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும், தனுசிகா முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் இரண்டாம் இடங்களையும், குகன் 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், சதீஸ்குமார் உயரம் பாய்தலிலும், பேனுஜா குண்டு போடுதல் போட்டியிலும், கிதேஸ் குண்டு போடுதல் போட்டியிலும், தனுசா 60 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் மூன்றாம் இடங்களைப் பெற்று பாடசாலையின் விளையாட்டுத் திறனை  நிலைநிறுத்தியுள்ளனர்.

No comments